ரூ.4.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார்!

By Saravana

ரூ.4.89 லட்சம் ஆரம்ப விலையில் புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் அக்டோபரில் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் செல்ல இருக்கும் நிலையில், முதலாவதாக இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார்.

முந்தைய மாடலில் இருந்த அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் பெட்ரோல் மற்றும் டீசலில் தலா 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் தொடர்ந்து காணலாம்.

வேரியண்ட் விபரம்

வேரியண்ட் விபரம்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஆப்ஷனல் மற்றும் அஸ்டா ஆகிய 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

 டிசைன்

டிசைன்

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ளூயிடிக் 2.0 டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியிலுள்ள ஹூண்டாய் டிசைன் மையத்தில் வடிவமைக்கப்பட்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய காரில் 83 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாகவும், 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் வந்துள்ளது. 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.60 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.54 கிமீ மைலேஜையும் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வசதிகள்

வசதிகள்

புதிய தலைமுறை எலைட் ஐ20 கார் நிரம்பிய வசதிகளுடன் வந்துள்ளது. பேஸ் மாடலான எரா வேரியண்ட்டில் பவர் விண்டோஸ், மேனுவல் ஏசி, சென்ட்ரல் லாக்கிங் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேக்னா வேரியண்ட்டில் ஃபோல்டு கீஷ ரியர் பார்சல் ட்ரே, முன்புற இருக்கைகளுக்கு ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளன. 1 ஜிபி மெமரியுடன் கூடிய 2டின் மியூசிக் சிஸ்டம் உள்ளது. ஆக்ஸ் போர்ட், யுஸ்பி போர்ட் வசதிகள் கொண்டவை. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளும் உண்டு.

 ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்

ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்

புதிய எலைட் ஐ20 ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் டிரைவர் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், எலக்ட்ரிக் ரியர் வியூ கண்ணாடிகள் ரியர் வியூ கேமரா, டீஃபாகர் போன்ற வசதிகளையும், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி.,யையும் கொண்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ஆப்ஷனல்

ஸ்போர்ட்ஸ் ஆப்ஷனல்

16 இஞ்ச் அலாய் வீல்கள், கிளட்ச் லாக், ஸ்மார்ட் கீ சிஸ்டம், க்ரோம் பூச்சு கொண்ட கதவு கைப்பிடிகள் ஆகியவை முக்கிய அம்சங்கள். அஸ்டா டாப் வேரியண்ட் நீண்ட ஆக்சஸெரீஸ்கள் பட்டியலை கொண்டுள்ளது. அதில், முன்புற பயணிக்கான ஏர்பேக், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக கூறலாம்.

பாதுகாப்பு வசதி

பாதுகாப்பு வசதி

விபத்து ஏற்படும்போது தானியங்கி முறையில் கதவுகள் திறந்து கொள்ளும் வசதியும் முக்கியமானதாக குறிப்பிடலாம்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ரெட் பேஸன், பிர்ஸ்டைன் புளூ, மிஸ்டிக் புளூ, ஸ்டார் டஸ்ட், மிடாஸ் கோல்டு, போலார் ஒயிட் மற்றும் ஸ்லீக் சில்வர் ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

பெட்ரோல்

எரா: ரூ.4.90 லட்சம்

மேக்னா: ரூ.5.42 லட்சம்

ஸ்போர்ட்ஸ்: ரூ.5.94 லட்சம்

அஸ்டா: ரூ.6.47 லட்சம்

டீசல்

எரா: ரூ.6.10 லட்சம்

மேக்னா: ரூ.6.62 லட்சம்

ஸ்போர்ட்ஸ்: ரூ.7.14 லட்சம்

அஸ்டா: ரூ.7.67 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்

More from DriveSpark

Article Published On: Monday, August 11, 2014, 14:17 [IST]
English summary
South Korean car maker Hyundai motors has launche of its new Elite i20 car in India today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+