புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு வந்தது- விபரம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள், கூடுதல் வசதிகளுடன் புதிய ஸ்கார்ப்பியோ வந்துள்ளது. மொத்தம் 6 வேரியண்ட்டுகளில் இரண்டுவிதமான எஞ்சின் ஆப்ஷன்களுடன் புதிய ஸ்கார்ப்பியோ கிடைக்கும்.

வேரியண்ட்டுகள்
எஸ்-2, எஸ்-4, எஸ்-6, எஸ்-8 மற்றும் எஸ்-10 ஆகிய வேரியண்ட்டுகளில் வசதிகளை பொறுத்து புதிய ஸ்கார்ப்பியோவை தேர்வு செய்து கொள்ளலாம்.

மாற்றங்கள்
புதிய சேஸீயில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. புதிய முகப்பு கிரில், மறுவடிவமைப்பு பெற்ற பானட், டெயில் லைட்டுகள், கருப்பு வண்ண பேனல்களுடன் கூடிய டெயில் கேட் புதிய இன்டிரியர் என அசத்தலாக மாறியிருக்கிறது புதிய ஸ்கார்ப்பியோ.

முக்கிய அம்சங்கள்
புரொஜெக்டர் ஹெட்லைட், புதிய ஸ்டீயரிங் அமைப்பு, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஜிபிஎஸ் நேவிகேஷன் என ஏராளமான வசதிகளுக்கும் குறைவில்லை. ஆட்டோமேட்டிக் ஏசி கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார், டயர் பிரஷர் மானிட்டர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

எஞ்சின் ஆப்ஷன்
பேஸ் மாடலான எஸ்2 வேரியண்ட்டில் 75 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில், மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டமும் உண்டு. பிற அனைத்து வேரியண்ட்டுகளும் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சினுடன் கிடைக்கும். இது 120 பிஎச்பி பவரையும், 280என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். ஆப்ஷனலாக 4 வீல் டிரைவ் மாடல் கிடைக்கும்.

விலை விபரம்
எஸ்-2 - ரூ. 7.98 லட்சம்
எஸ்-4 - Rs. 8.60 லட்சம்
எஸ்-6 - ரூ. 9.77 லட்சம்
எஸ்-8 - ரூ. 10.84 லட்சம்
எஸ்-10 - Rs. 11.46 லட்சம்
(அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலை)


Click it and Unblock the Notifications








