ரூ.3.80 லட்சத்தில் மாருதியின் புதிய ஆல்ட்டோ கே10 ஆட்டோமேட்டிக் கார் அறிமுகம்!
மிக சவாலான விலையில் புதிய மாருதி ஆல்ட்டோ கே10 கார் விலையை நிர்ணயித்து பட்ஜெட் கார் மார்க்கெட்டை கிடுகிடுக்க வைத்துள்ளது மாருதி கார் நிறுவனம். ஆம், முந்தைய மாடலைவிட ரூ.30,000 குறைவான விலையில் புதிய ஆல்ட்டோ கே10 காரின் விலையை நிர்ணயித்து அறிமுகம் செய்துள்ளது.
ஆட்டோமொபைல் ஆக்சஸெரீஸ் மீது 75 சதவீதம் தள்ளுபடி- விபரம்!
மேலும், மார்க்கெட்டிலேயே மிக குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கார் மாடலாகவும் இதனை நிலைநிறுத்தியுள்ளது மாருதி. விலை, மைலேஜ், கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட் விபரம்
எல்எக்ஸ், எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஆப்ஷனல், விஎக்ஸ்ஐ ஆட்டோமேட்டிக் ஆகிய 5 பெட்ரோல் வேரியண்ட்டுகளிலும், எல்எக்ஸ்ஐ வேரியண்ட் வசதிகளுடன் ஒரு சிஎன்ஜி வேரியண்ட் உள்பட மொத்தம் 6 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

மாற்றங்கள்
ஆல்ட்டோ 800 காரின் பாடியில் மாறுதல்களை செய்து பொலிவுடன் இந்த புதிய கே10 காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது. இதில், குறிப்பிட்டு கூறும்படியாக இருப்பவை, காரின் வண்ணத்திலான கதவு கைப்பிடிகள் மற்றும் ரியர் வியூ கண்ணாடிகள், கருப்பு வண்ணத்தில் பி பில்லர் போன்றவற்றை கூறலாம். இந்த காரில் 13 இஞ்ச் விட்டம் கொண்ட வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்டிரியர்
ஆல்ட்டோ 80 காரின் இன்டிரியருக்கும் இதற்கும் சம்பந்தமில்லாத வகையில் இன்டிரியர் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. புதிய டேஷ்போர்டு டிசைன், இரட்டை வண்ண இன்டிரியர், புதிய அப்ஹோல்ஸ்டரி, கிளாஸ் பிளாக் சென்டர் கன்சோல், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

மைலேஜ்
முந்தைய கே10 காரைவிட 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை புதிய ஆல்ட்டோ கே10 கார் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கே10 காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தரும் என்றும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 32.26 கிமீ மைலேஜ் செல்லும் என்றும் மாருதி தெரிவித்துள்ளது.

விலை விபரம்
எல்எக்ஸ்: ரூ.3.06 லட்சம்
எல்எக்ஸ்ஐ: ரூ.3.22 லட்சம்
விஎக்ஸ்ஐ: ரூ.3.38 லட்சம்
விஎக்ஸ்ஐ(ஆப்ஷனல்): ரூ.3.57 லட்சம்
விஎக்ஸ்ஐ(ஆட்டோமேட்டிக்):ரூ.3.80 லட்சம்
எல்எக்ஸ்ஐ(சிஎன்ஜி):ரூ.3.82 லட்சம்
(டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)


Click it and Unblock the Notifications








