ரூ.6.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி சியாஸ் கார்!
மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் சவாலான விலையில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 10 வேரியண்ட்டுகளில் சியாஸ் கார் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் மாடலிலும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட டீசல் மாடலிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

முதலீடு
இதுவரை மாருதி தயாரித்த மாடல்களிலேயே அதிக முதலீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் கார் மாடல் இதுதான். ரூ.620 கோடி செலவு செய்து இந்த புத்தம் புதிய காரை மாருதி தயாரித்துள்ளது. இந்தியா மற்றும் சீன மார்க்கெட்டுகளை மனதில் கொண்டு இந்த புதிய கார் மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இடவசதி
போட்டியாளர்களைவிட 10 முதல் 12 சதவீதம் வரை கூடுதலான கேபினில் இடவசதி கொண்ட மாடலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களின் தேர்வு பட்டியலில் சியாஸ் முக்கிய இடத்தை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

எஞ்சின்
1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் கொண்டதாக கிடைக்கும். பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மைலேஜ்
இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை மாருதி சியாஸ் பெற்றிருக்கிறது. ஆம், இதன் டீசல் மாடல் லிட்டருக்கு 26.2 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.7 கிமீ மைலேஜ் தரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
பெட்ரோல்
சியாஸ் வி- ரூ.6.99 லட்சம்
சியாஸ் வி+ - ரூ.7.55 லட்சம்
சியாஸ் இசட்: ரூ.8.24 லட்சம்
சியாஸ் இசட்(ஓ): ரூ.8.59 லட்சம்
ஆட்டோமேட்டிக் - பெட்ரோல்
வி+ ஏடி: ரூ.8.65 லட்சம்
இசட் ஏடி: ரூ.9.34 லட்சம்
டீசல்
சியாஸ் வி: ரூ.8.04 லட்சம்
சியாஸ் வி+: ரூ.8.63 லட்சம்
சியாஸ் இசட்: ரூ.9.45 லட்சம்
சியாஸ் இசட்(ஓ): ரூ.9.80 லட்சம்

சென்னை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
பெட்ரோல்
சியாஸ் வி- ரூ.7.39 லட்சம்
சியாஸ் வி+ - ரூ.7.96 லட்சம்
சியாஸ் இசட்: ரூ.8.66 லட்சம்
சியாஸ் இசட்(O): ரூ.9.02 லட்சம்
ஆட்டோமேட்டிக் - பெட்ரோல்
வி+ ஏடி: ரூ.9.08 லட்சம்
இசட் ஏடி: ரூ.9.78 லட்சம்
டீசல்
சியாஸ் வி: ரூ.8.46 லட்சம்
சியாஸ் வி+: ரூ.9.06 லட்சம்
சியாஸ் இசட்: ரூ.9.89 லட்சம்
சியாஸ் இசட்(ஓ): ரூ.10.25 லட்சம்


Click it and Unblock the Notifications








