மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் கார்களின் எடிசன்- 1 விற்பனைக்கு அறிமுகம்
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் கார்களின் லிமிடேட் எடிசன் மாடல் இன்று விற்பனைக்கு வந்தது. ஏ 180சிடிஐ மற்றும் பி180 சிடிஐ மாடல்களில் லிமிடேட் எடிசனாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல்கள் எடிசன்1 என்ற பெயரில் கிடைக்கும்.
அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாகவும், கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் கார்களின் எடிசன் 1 வந்துள்ளது. அடுத்த ஆண்டு வர இருக்கும் ஏ கிளாஸ் காரில் இந்த அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிமிடேட் எடிசன்
ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் கார்களின் எடிசன் 1 மாடல்கள் தலா 100 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

வெளிப்புற மாற்றங்கள்
புதிய அலாய் வீல்கள், பாடி டீகெல் ஸ்டிக்கர், கருப்பு நிற பூச்சுடன் ரியர் நியூ கண்ணாடிகள், பனரோமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. வெள்ளை, சில்வர் மற்றும் சிவப்பு ஆகிய வெளிப்புற வண்ணங்களில் கிடைக்கும்.

வசதிகள்
முன்புறத்தில் பயணி பக்கத்திற்கு மெமரி வசதியுடன் கூடிய எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் இருக்கை, ரிவர்ஸ் கேமரா, பின் இருக்கைக்கான ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள் ஆகியவற்றை முக்கியமாக கூறலாம். மேலும், டிவிடி பிளேயர், பின்புற பயணிகளுக்காக முன்இருக்கையின் பின்னால் 17.8 செமீ அகலம் கொண்ட திரைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஹெட்போன்களும், ரிமோட் கன்ட்ரோல் வசதியும் உள்ளன.

எஞ்சின்
ஏ180 சிடிஐ ஏ கிளாஸ் காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 109 பிஎச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். 7 ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது.

ஸ்பெஷல் சீட் கவர்
எடிசன் 1 பேட்ஜ் கொடுக்கப்பட்ட இருக்கைகள் கவர்கின்றன.

விலை
பென்ஸ் ஏ கிளாஸ் எடிசன் 1 ரூ.26.17 லட்சம் விலையிலும், பி கிளாஸ் காரின் எடிசன் 1 மாடல் ரூ.28.75 லட்சம் விலையிலும் வந்துள்ளன. அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையாகும்.


Click it and Unblock the Notifications








