மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் எஸ்யூவியின் ஏஎம்ஜி மாடல் விற்பனைக்கு வந்தது!
அதிசக்திவாய்ந்த ஜிஎல்63 ஏஎம்ஜி மாடல் சொகுசு எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஜிஎல் கிளாஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்ட வரப்பட்டு ஓர் ஆண்டுக்கு பின்னர், அந்த எஸ்யூவியின் ஏஎம்ஜி மாடல் தற்போது வந்துள்ளது.
இந்தியாவில் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் எஸ்யூவி ரூ78.88 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், அதன் ஏஎம்ஜி மாடல் ரூ.1.66 கோடி விலையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஏஎம்ஜி மாடலின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை வித்தியாசம்
சாதாரண ஜிஎல் கிளாஸ் எஸ்யூவி புனேயிலுள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. ஆனால், அதன் ஏஎம்ஜி மாடலான ஜிஎல்63 இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதுவே, விலை இரு மடங்கு அதிகமாக இருப்பதற்கு காரணம்.

எஞ்சின்
இந்த எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செக்மென்ட்டில் அதிக பவர் கொண்ட மாடல் இதுதான். இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் 550 பிஎச்பி ஆற்றலையும், 760 என்எம் டார்க்கையும் அளிக்கும். இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் ஏஎம்ஜி ஸ்பீடுஷிப்ட் 7ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தின் மூலம் முன்பக்க சக்கரங்களுக்கு 40 சதவீத பவரையும், பின் சக்கரங்களுக்கு 60 சதவீத பவரையும் செலுத்தும். சாதாரண ஜிஎல் கிளாஸ் எஸ்யூவியில் 258 பிஎச்பி பவரை அளிக்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்
இந்த எஸ்யூவி 0- 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்
அதிசக்திவாய்ந்த எஞ்சின் தவிர்த்து ஜில்63 ஏஎம்ஜி மாடலில் ஏஏர் சஸ்பென்ஷன், ஆட்டோமேட்டிக் லெவல் கன்ட்ரோல், அடாப்டிவ் டேம்பிங் சிஸ்டம் அடங்கிய ரைடு கன்ட்ரோல் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் சிஸ்டம் உள்ளது. ரோல் ஆவதை தவிர்க்கும் ஆக்டிவ் கர்வ் சிஸ்டமும் உள்ளது.


Click it and Unblock the Notifications








