இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய தலைமுறை மினி கார்!
இந்தியாவில் புதிய தலைமுறை மினி கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மும்பையில் நடந்த விழாவில் 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் புதிய தலைமுறை மினி கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
மேலும், முதல்முறையாக 5 கதவுகள் கொண்ட மாடலிலும் மினி வந்திருக்கிறது இந்தியர்களின் ஆர்வத்தை தூண்டும் விஷயம். மினி என்று பெயருக்கு ஏற்றாற்போல் சின்னதாக இல்லை. புதிய தலைமுறை மினி கார்கள் வடிவத்தில் பெரிதாகியிருக்கிறது. அட்டகாசமான இந்த புதிய தலைமுறை மினி கார்களை பற்றிய கூடுதல் தகவல்கள், அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட காரின் புகைப்படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு
மறுவடிவமைப்பு பெற்ற முகப்பு கிரில், கூப்பர் எஸ் மாடலில் கருப்பு நிற தேன்கூடு வடிவ கிரில் அமைப்பு, எல்இடி விளக்குகள் ஆப்ஷனலாக கிடைக்கும் ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்டுகள் போன்றவை வெளிப்புறத்தில் முக்கிய மாற்றங்கள். வடிவத்திலும் மினி காராக இல்லை. தற்போது பெரிய காராக மாறியிருக்கிறது புதிய மினி. 5 டோர் மாடல் இன்னமும் கூட நீளத்தில் அதிகமாக உள்ளது.

எஞ்சின்
- எஞ்சின்: 1.5 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்சின்
- டார்க்: 270என்எம்
- பவர்: 114 எச்பி
- டாப் ஸ்பீடு: 200கிமீ
- ஆக்சிலரேசன்: 0- 100 கிமீ வேகத்தை 9.2 வினாடிகளில் எட்டும்
- கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

வசதிகள்
புதிய டேஷ்போர்டு அமைப்பு, ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், நீள, அகலம், உயரத்திலும், வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டிருப்பதாலும், உட்புறத்தில் அதிக இடவசதி, புளுடூத், ஆட்டோமேட்டிக் ஏசி போன்றவை குறிப்பிட்டு கூறலாம்.

பாதுகாப்பு வசதிகள்
டிரைவர் மற்றும் பயணிகளுக்கான ஏர்பேக்குகள், அவசர காலங்களில் உதவும் தானியங்கி பிரேக் பிடிக்க உதவும் பிரேக் அசிஸ்ட் வசதி, விபத்து ஏற்படும்போது கதவுகளை தானியங்கி முறையில் திறக்க உதவும் கிராஷ் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார் சக்கரங்கள் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாவதை தவிர்க்கும் டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை புதிய தலைமுறை மினி கார் கொண்டுள்ளது.

மும்பை எக்ஸ்ஷோரூம் விலை
மினி கூப்பர் டி(3 டோர்): ரூ.31.85 லட்சம்
மினி கூப்பர் டி(5 டோர்): ரூ.35.20 லட்சம்
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மினி கூப்பர் எஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பிரத்யேக படங்கள்
புதிய மினி காரின் பிரத்யேக படங்கள் அடங்கி ஆல்பத்தை உயர்துல்லியத்தில் காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








