அசத்தும் புதிய ஸ்கோடா எஸ்டேட் காரின்படங்கள்!

கடந்த ஆண்டு இறுதியில் புதிய ஆக்டாவியா காரின் புகைப்படங்களை வெளியிட்டது ஸ்கோடா. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் புதிய ஆக்டாவியா அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய ஆக்டாவியாவின் புதிய கோம்பி எஸ்டேட் மாடலின் புகைப்படங்களையும் ஸ்கோடா தற்போது வெளியிட்டிருக்கிறது.

அதிக பொருட்களை எடுத்துச் செல்லும் வசதி, அதிக லெக்ரூம், கவர்ச்சியான டிசைன் ஆகியவை இந்த புதிய கோம்பி எஸ்டேட் காரின் சிறப்பம்சங்களாக ஸ்கோடா தெரிவித்துள்ளது. புதிய ஸ்கோடா ஆக்டாவியா எஸ்டேட் காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கொஞ்சம் பெரிசு

கொஞ்சம் பெரிசு

முந்தைய கோம்பி வெர்ஷனை விட தற்போதைய மாடல் 90மிமீ கூடுதல் நீளமும், 45 மிமீ கூடுதல் அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாராள லெக்ரூம்

தாராள லெக்ரூம்

நீள, அகலத்தில் கூடுதலாகி இருப்பதால் இதன் வீல் பேஸும் 11 செமீ கூடுதலாகி இருக்கிறது. இதனால், பின் இருக்கையில் கால்களை தாராளமாக நீட்டி மடக்கி உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு 73 மிமீ அளவுக்கு லெக்ரூம் கொண்டிருக்கிறது.

பூட்ரூம்

பூட்ரூம்

புதிய ஆக்டாவியா எஸ்டேட் காரில் 610 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இருக்கிறது. பின் இருக்கையை மடக்கினால் 1740 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இதன் பூட்ரூம் மாறிவிடுகிறது.

ஆல் வீல் டிரைவ்

ஆல் வீல் டிரைவ்

இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும்.

 அறிமுகம்

அறிமுகம்

அடுத்த மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த காரை பார்வைக்கு வைக்க உள்ளது ஸ்கோடா.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 20, 2013, 10:29 [IST]
English summary
Czech republic car maker Skoda has revealed the 2013 Octavia Combi which will be showcased together with the 4x4 variant in Geneva next month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+