புதிய டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார் விற்பனைக்கு வந்தது- விலை விபரம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சவாலான ஆரம்ப விலையில் புதிய டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடல் 3 வித டிரைவிங் ஆப்ஷன்களை கொண்டதாக வந்துள்ளது. டீசல் மாடல் இருவித ட்யூனிக் கொண்டதாகவும், இருவிதமான டிரான்ஸ்மிஷன் மாடல்களிலும் கிடைக்கும்.

டீசல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தவிர்த்து, ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீசல் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட முதல் காரும் இதுதான். வசதிகளை பொறுத்து பெட்ரோல் மாடலில் 4 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடலில் 5 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.
டாடா ஸெஸ்ட் விலை விபரம்
பெட்ரோல்
எக்ஸ்இ: ரூ.4.64 லட்சம்
எக்ஸ்எம்: ரூ.5.25 லட்சம்
எக்ஸ்எம்எஸ்: ரூ.5.43 லட்சம்
எக்ஸ்டி: ரூ.5.99 லட்சம்
டீசல் மாடல்
எக்ஸ்இ: ரூ.5.64 லட்சம்
எக்ஸ்எம்: ரூ.6.27 லட்சம்
எக்ஸ்எம்ஸ்: ரூ.6.45 லட்சம்
எஃப்- ட்ரோனிக்: ரூ.6.99 லட்சம்
எக்ஸ்டி: ரூ.6.99 லட்சம்
அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை.


Click it and Unblock the Notifications








