புதிய டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் விற்பனைக்கு வந்தது: விபரம்
இந்தியாவில் 11வது தலைமுறை டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் மிக அசத்தலாக இருந்தது.
எனவே, இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்புடன் வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நேற்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்பதிவு
டீசல் மாடலில் 4 வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல் மாடலில் 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பெஞ்ச்மார்க் கலெக்ஷன் என்ற பெயரில் ஸ்பெஷல் பேக்கேஜும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கரொல்லாவுக்கு ரூ.50,000 பெற்றுக் கொண்டு டொயோட்டா டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

எஞ்சின்
புதிய கரொல்லாவில் 1.4 லிட்டர் டி4 டி டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 1.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல்ம மாடலில் 7 ஸ்பீடு சிவிடிஐ சீக்குவன்ஷியல் ஷிஃப்ட்மேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

பாதுகாப்பு அம்சங்கள்
இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், இம்மொபைலைசர், ரியர் கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. எல்இடி ஹெட்லைட் சிஸ்டமும் உள்ளது.

இன்டிரியர்
சைபர் கார்பன் பியானோ பிளாக் இன்ஸ்ட்ரூமென்ட், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், சாய்மான வசதி கொண்ட பின் இருக்கைகள், குரோம் வேலைப்பாடுகள் நிறைந்ததாக வந்துள்ளது.

விலை
பெட்ரோல் மாடல் ரூ.11.99 லட்சம் முதலும், டீசல் மாடல் ரூ.13.07 லட்சம் முதலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சில்வர் மைக்கா மெட்டாலிக், சாம்பைன் மைக்கா மெட்டாலிக், கிரே மெட்டாலிக், புளூ மெட்டாலிக், செலஸ்டியல் பிளாக், ஒயிட் பியர்ல் கிறிஸ்டல் ஷைன், சூப்பர் ஒயிட் 2 ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








