ரூ.8.49 லட்சத்தில் ஆட்டோமேட்டிக் நிசான் சன்னி அறிமுகம்
ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட சன்னி காரை நிசான் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
ரூ.8.49 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஆட்டமேட்டிக் சன்னி கார் விற்பனைக்கு கிடைக்கும். ரெனோ ஸ்காலாவில் இருக்கும் அதே சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸமிஷன்தான் சன்னி காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

சன்னியின் எக்ஸ்எல் பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் கிடைக்கும். 97 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் சன்னி வருகிறது.
லிட்டருக்கு 17.97 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. இதே சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மைக்ரா காரையும் விரைவில் நிசான் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








