கூடுதல் அம்சங்களுடன் நிசானின் ஸ்பெஷல் சன்னி

2011ல் அறிமுகம் செய்யப்பட்ட சன்னி நிசானின் விற்பனைக்கு பூஸ்ட் கொடுத்த மாடலாக விளங்குகிறது.
மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் அதிக இடவசதி கொண்ட காராகவும் இருப்பதால் வாடிக்கையாளர்களையும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், கூடுதல் அம்சங்களுடன் தற்போது சன்னியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை நிசான் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
டச் ஸ்கிரீனுடன் 2 டின் மல்டி மீடியா சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், ரியர் ஸ்பாய்லர் மற்றும் குரோம் பினிஷிங்குடன் கூடிய பேட்ஜ் ஆகியவற்றுடன் ஸ்பெஷல் எடிசன் சன்னி கிடைக்கும்.
நிசான் சன்னியில் 100 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 86 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் சன்னியில் பொருத்தப்பட்டிருக்கிறது.
எக்ஸ்வி வேரியண்ட்களில் மட்டுமே ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும். பெட்ரோல் எக்ஸ்வி வேரியண்ட் ரூ.8.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் எக்ஸ்வி வேரியண்ட் ரூ.9.68 லட்சம் விலையிலும் கிடைக்கும்.
ஸ்பெஷல் எடிசனை தொடர்ந்து அடுத்து சன்னியின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலையும் நிசான் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.


Click it and Unblock the Notifications








