சென்னையில் நிசான் டெரானோ அறிமுகம்: விலை விபரம்
ரூ.9.59 லட்சம் ஆரம்ப விலையில் புதிய நிசான் டெரானோ எஸ்யூவி இன்று முதல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நிசான் டெரானோ எஸ்யூவி சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலான நிசான் டெரானோ ரூ.70,000 கூடுதலான விலையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.|

பெட்ரோல் மாடலில் ஒரே ஒரு வேரியண்ட்டிலும், இருவிதமான சக்தி கொண்ட டீசல் மாடல்கள் 6 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.
டஸ்ட்டரைவிட புறத்தோற்றத்தில் பல விதமான மாறுதல்களை கண்டிருந்தாலும், டெரானோ எஞ்சின்களில் மாற்றம் இல்லை. அதே எஞ்சின்கள் மற்றும் சக்தி கொண்டதாக இருக்கும். சென்னை விலை விபரத்தை கீழே காணலாம்.
பெட்ரோல் மாடல்
எக்ஸ்எல்: ரூ.9.78 லட்சம்
85 பிஎஸ் டீசல் மாடல்
எக்ஸ்இ: ரூ.9.59 லட்சம்
எக்ஸ்எல்: ரூ.10.65 லட்சம்
எஸ்எல் ப்ளஸ்: ரூ. 10.92 லட்சம்
110 பிஸ் டீசல் மாடல்
எக்ஸ்எல்: ரூ.11.31 லட்சம்
எக்ஸ்வி: ரூ.12.14 லட்சம்
எக்ஸ்வி பிரிமியம்: ரூ.12.44 லட்சம்


Click it and Unblock the Notifications








