டீசலில் மட்டுமே வருகிறது நிசான் டெரானோ: அக்டோபரில் அறிமுகம்

டீசலில் மட்டுமே இந்த புதிய டெரானோ எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பதாகவும் நிசான் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
புதிய டெரானோ எஸ்யூவி எக்ஸ்எல், எக்ஸ்எல்(ஓ), எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரிமியம் ஆகிய 4 வேரியண்ட்களில் கிடைக்கும்.
85 பிஎஸ் பவரையும், 200என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.
நிசான் டெரானோ லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளதாகவும் நிசான் வட்டாரத் தகவல் கூறுகிறது.
ரினால்ட் டஸ்ட்டரின் ஆர்எக்ஸ்இ என்ற பேஸ் வேரியண்ட் ரூ.8.73 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது.
இதைவிட ரூ.17,000 கூடுதலான விலையில், நிசான் டெரானோ எக்ஸ்எல் பேஸ் வேரியண்ட் ரூ.8.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








