மும்பையில் நிசான் டெரானோ அறிமுகம்: செப்டம்பர் முதல் முன்பதிவு
மும்பையில் நடந்த வண்ணமிகு விழாவில் நிசான் டெரானோ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. டஸ்ட்டரைவிட வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாற்றங்களை சந்தித்துள்ளது டெரானோ .
ஒரு சினிமா ஷூட்டிங் போல் நடத்தப்பட்ட இந்த விழாவில் நிசான் டெரானோவின் விபரங்களை நிசான் நிறுவனம் வெளியிட்டது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

முகப்பு
ஹெட்லைட், இன்டிகேட்டர் லைட், முன்பக்க கிரில் என அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. வி வடிவ குரோம் பட்டைகளுடன், பின்னணியில் தேன்கூடு வடிவ கிரில்கள் பொருத்தப்பட்டுள்ளன. பம்பரும் புதிய டிசைன்தான்.

பக்கவாட்டு டிசைன்
பக்கவாட்டில் அதிக மாற்றங்கள் தெரியவில்லை. புதிய அலாய் வீல்கள், கருப்பு வண்ணம் பூசப்பட்ட பில்லர்கள் ஆகியவை கூறலாம்.

பின்புற டிசைன்
பின்புறத்தில் புதிய டெயில் லைட் கிளஸ்ட்டர், புதிய பூட் லிட் ஆகியவற்றுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்டிரியர்
உட்புறத்தில் புதிய ஸ்டீயரிங் வீல், நீள் சதுர ஏசி வென்ட்டுகள், புதிய மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றுடன் சென்டர் கன்சோலில் மரவேலைப்பாடுகளிலும் புதுமை தெரிகிறது.

வண்ணங்கள்
சிவப்பு, சாம்பல், சில்வர், கருப்பு, வெள்ளை மற்றும் பித்தளை சாம்பல் கலவை நிறம் என மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை
ரூ.10 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்பட உள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது. அதேவேளை, டஸ்ட்டரைவிட ரூ.70,000 வரை கூடுதல் விலையில் வரலாம் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் கணிப்பாக உள்ளது.

விற்பனை
வரும் செப்டம்பரில் இந்த காம்பெக்ட் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்குகிறது. அக்டோபர் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிசான் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








