டெல்லி பார்முலா1 டிராக்கில் நீங்களும் கார், பைக் ஓட்டலாம்- முழு விபரம்
பார்முலா1 கார்கள் சீறிப்பாய்ந்த டெல்லி அருகே நொய்டாவில் உள்ள பார்முலா 1 பந்தய டிராக்கில் நீங்களும் கார் ஓட்டுவதற்கு ஆவலாக இருக்கிறீர்களா? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை புத் இன்டர்நேஷனல் அமைப்பு வழங்குகிறது.
வரும் 17ந் தேதி புத் இன்டர்நெஷனல் பந்தய களத்தில் பொதுமக்கள் கார் ஓட்டுவதற்காக திறக்கப்படுகிறது. இதற்காக, கார் ஓட்ட விரும்புபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 4,000 ரூபாயும், பைக் வைத்திருப்பவர்களுக்கு 3,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஒரு செசனுக்கான கட்டணம் இது. நீங்கள் மூன்று செசனுக்கான கட்டணத்தை செலுத்தினால், ஒரு செசனுக்கான அதாவது ஒரு மணிநேரம் இலவசமாக ஓட்டுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். மேலும், பந்தய களத்தில் கார் ஓட்ட விரும்புபவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் இருத்தல் அவசியம்.
மேலும், பந்தய களத்தில் ஓட்டுவதற்கு முன்பாக உங்களது வாகனத்தின பிரேக் உள்ளிட்ட பாதுகாப்பு நிலவரங்களை பந்தய கள அமைப்பினர் பரிசோதித்த பின்னரே உள்ள அனுமதிப்பர்.
இதுதவிர, புத் இன்டர்நேஷனல் டிராக்கில் செயல்பட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் சூப்பர் கார் டிரைவிங் ஸ்கூல் கூட வருகை தருபவர்களுக்கு சிறப்பு டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை பென்ஸ் வழங்க உள்ளது. எஸ்எல்எஸ் ஏஎம்ஜி, இ கிளாஸ், சி கிளாஸ் மற்றும் எம்எல் கிளாஸ் கார்களை ஓட்டிப் பார்க்கும் அரிய வாய்ப்பை வழங்குகிறது.

புத் இன்டர்நெஷனல் சர்க்யூட்

புத் இன்டர்நெஷனல் சர்க்யூட்

புத் இன்டர்நெஷனல் சர்க்யூட்

புத் இன்டர்நெஷனல் சர்க்யூட்

புத் இன்டர்நெஷனல் சர்க்யூட்

புத் இன்டர்நெஷனல் சர்க்யூட்

புத் இன்டர்நெஷனல் சர்க்யூட்



Click it and Unblock the Notifications








