ஹைட்ராலிக் கார் இருக்கை: முதியவர்களுக்கு வரப்பிரசாதம்
காரில் ஏற முடியாத மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் காருக்குள் எளிதாக ஏறும் வகையில், ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய இருக்கையை பாரகோட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மோட்டார் இல்லங்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம் வாகன கஸ்டமைசேஷனிலும் பிரபலமாக திகழ்கிறது.
மாருதி ஈக்கோ மற்றும் நிசான் எவாலியா உள்ளிட்ட யுட்டிலிட்டி ரக கார்களில் இந்த இருக்கையை பொருத்த முடியும். ஒரு பொத்தானை அழுத்தினால் இருக்கை காருக்கு வெளியே வந்துவிடும். அதில், பயணி அதில் ஏறி அமர்ந்தவுடன் அழகாக அப்படியே உள்ளுக்குள் சென்றுவிடும். ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த இருக்கையை பொருத்துவதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என பாரகோட் நிறுவனம் தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications








