ரூ.1.11 கோடி விலையில் விற்பனைக்கு வந்தது புதிய போர்ஷே மசான்!

By Saravana

கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்திய புதிய போர்ஷே மசான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போர்ஷே கேயென் எஸ்யூவியின் மினி மாடலாக கூறப்படும் இந்த எஸ்யூவி போர்ஷே விற்பனைக்கு புதுத்தெம்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டைலான தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின், சரியான விலை ஆகிய சரியான விகிதம் கொண்ட இந்த புதிய சொகுசு எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும். கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


மசான் என்றால்...

மசான் என்றால்...

இந்தோனேஷிய மொழியில் மசான் என்றால் புலி என்று அர்த்தம். அதனடிப்படியிலேயே பெயரிடப்பட்டுள்ளதாம். போர்ஷேவின் 911 மற்றும் ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் கார்களை போன்று சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கும் விதத்தில் இந்த எஸ்யூவியை வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்பதிவு

முன்பதிவு

இந்த புதிய எஸ்யூவிக்கான நடப்பாண்டுக்கான முன்பதிவு இந்தியாவில் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இனி முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த ஆண்டு ஒதுக்கீட்டில்தான் இந்த எஸ்யூவியை வாங்க முடியும்.

மாடல்கள்

மாடல்கள்

மசான் டர்போ என்ற பெட்ரோல் மாடலிலும், மசான் எஸ் என்ற டீசல் மாடலிலும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும்.

 பெட்ரோல்

பெட்ரோல்

பெட்ரோல் மாடலில் 400 எச்பி ஆற்றலையும், 550 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3,304சிசி வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 266 கிமீ வேகத்தில் செல்லத்தக்க கட்டமைப்பை கொண்டுள்ளது.

டீசல்

டீசல்

டீசல் மாடலில் 245 எச்பி ஆற்றலையும், 580 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது மணிக்கு 230 கிமீ வேகம் வரை செல்லும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

பெட்ரோல் மாடல் 0- 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளிலும், டீசல் மாடல் 0- 100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளிலும் எட்டும் வல்லமை கொண்டது.

 விலை

விலை

பெட்ரோல் மாடல் ரூ.1.11 கோடி விலையிலும், டீசல் மடால் ரூ.1 கோடி விலையிலும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


More from DriveSpark

Article Published On: Tuesday, July 22, 2014, 11:34 [IST]
English summary
German luxury car maker Porsche has launched its most anticipated compact luxury SUV Macan in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+