அதிசக்திவாய்ந்த புதிய பனமிரா மாடலை அறிமுகப்படுத்திய போர்ஷே

By Saravana

இந்தியாவில் போர்ஷே பனமிரா காரின் டர்போ எஸ் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 5 வேரியண்ட்டுகளில் மேம்படுத்தப்பட்ட பனமிரா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், பனமிரா வரிசையில் அதிக சக்திவாய்ந்த மாடலான டர்போ எஸ் காருக்கு தற்போது முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள், படங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

 புதிய அம்சங்கள்

புதிய அம்சங்கள்

புதிய அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய முன்புற பம்பர் ஆகியவை மாற்றங்கள் கண்டுள்ளன. புதிய ஸ்பாய்லர் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 570 பிஎச்பி ஆற்றலையும், 800 என்எம் டார்க்கையும் அளிக்கும் 4.8 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு பிடிகே ட்யூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. இது பனமிரா டர்போ மாடலைவிட 50 பிஎச்பி கூடுதல் பவரை வழங்க வல்லது.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்ட இந்த புதிய கார் மணிக்கு அதிகபட்சமாக 310 கிமீ வேகம் வரை செல்லும் கட்டமைப்பு கொண்டது.

 டெலிவிரி

டெலிவிரி

இந்க காருக்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில், வரும் பிப்ரவரி முதல் காரை டெலிவிரி கொடுக்க போர்ஷே திட்டமிட்டுள்ளது.

விலை

விலை

போர்ஷே பனமிரா டர்போ கார் ரூ.2.01 கோடி விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய மாடல் டர்போ மாடலைவிட ரூ.25 லட்சம் வரை கூடுதலான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2013, 10:19 [IST]
English summary
Porsche has launched new Panamera Turbo S variant in Indian. New Panamera Turbo S is more powerful than previous variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+