உலகின் முதல் 9 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் ரேஞ்ச்ரோவர் எவோக்!
உலகின் அதிநவீன மற்றும் அதிவேகம் கொண்ட இசட்எஃப் கியர் பாக்ஸ் கொண்ட முதல் மாடலை லேண்ட்ரோவர் அறிமுகப்படுத்துகிறது. எவோக் எஸ்யூவியில்தான் இந்த புதிய 9 ஸ்பீடு இசட்எஃப் கியர் பாக்ஸை பொருத்த உள்ளது லேண்ட்ரோவர். இந்த கியர் பாக்ஸுடன் வரும் முதல் உற்பத்தி நிலை மாடல் என்ற பெருமையை எவோக் பெறுகிறது.
இசட்எஃப் 8 ஸ்பீடு டிரான்ஸமிஷனை தொடர்ந்து தற்போது இசட்எஃப் 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை லேண்ட்ரோவர் அறிமுகப்படுத்த உள்ளது. இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கார்களுக்கு பொருந்தியது. ஆனால், இந்த புதிய 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் முன்பக்க டிரைவிங் சிஸ்டம் கொண்ட கார்களுக்கு பொருந்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

புதிய 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் குறித்த முழு விபரங்களையும் லேண்ட்ரோவர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், எவோக்கில் தற்போது பணிபுரிந்து வரும் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை விட 7.5 கிலோ குறைவான எடை கொண்டதாக இருக்கும். புதிய டிரான்ஸ்மிஷன் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், அதேவேளை குறைந்த கார்பன் புகையை வெளியிடும் வகையில் சிறப்பம்சங்களை கொண்டது என லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.
மேலும், புதிய டிரான்ஸ்மிஷன் ஓட்டுபவருக்கு ஓர் பரவசமான அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், டிரைவரின் ஓட்டும் யுக்தியை உணர்ந்து கொள்ளும் தொழில்நுட்பத்தை இந்த டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. உதாரணமாக, வேகமாக செல்ல நினைத்து ஆக்சிலேட்டரை கூடுதலாக கொடுக்கும்போது தானாகவே ஒரு கியரை விட்டு அடுத்த கியருக்கு தாவிவிடும்.


Click it and Unblock the Notifications








