ரெனோ டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடல் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஆல் வீல் டிரைவ் மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான டஸ்ட்டர் எஸ்யூவிகள் விற்பனையாகிய நிலையில், இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. ஆஃப் ரோடு பிரியர்களை ஆவலைத் தூண்டியிருக்கும் இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள், எஞ்சின், விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறிய மாற்றங்கள்
வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சிறிய மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இருக்கைகள், டேஷ்போர்டு உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

எஞ்சின்
ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி மாடல் 110 பிஎஸ் பவர் அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 1,750 ஆர்பிஎம்.,மில் 245 என்எம் டார்க்கை வழங்கக்கூடியது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்
சாலை நிலைக்கு ஏற்றவாறு டிரைவிங் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வசதியாக ஷிஃப்ட் பை ப்ளை சிஸ்டம் கொண்டதாக வந்திருக்கிறது. இந்த புதிய டஸ்ட்டர் மாடலில் 2 வீல் டிரைவ், ஆட்டோ மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகிய மோடுகளில் மாற்றிக் கொள்ளலாம்.

பாதுகாப்பு வசதிகள்
இஎஸ்பி தொழில்நுட்பம், அன்டர் ஸ்டீயர் கன்ட்ரோல், விபத்துக்களின்போது தானாக கதவு திறந்து கொள்ளும் இம்பேக்ட் சென்சிட்டிவ் டோர் அன்லாக்கிங் போன்ற வசதிகள் உள்ளன. தவிர, ஐடிரைவ் டெக்னாலஜி மற்றும் எலக்ட்ரானிக் டார்க் கன்ட்ரோல் ஆகியவையும் இருக்கின்றன.

பிரத்யேக வண்ணத்தில்..
அமேசான் க்ரீன் என்ற பிரத்யேக வண்ணத்திலும் ரெனோ டஸ்ட்டரின் ஆல் வீல் டிரைவ் மாடல் கிடைக்கும்.

சஸ்பென்ஷன்
இதில் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 4 வீல்களுக்கான சஸ்பென்ஷன் அமைப்பும் தனித்தனியாக இயங்கும்.

விலை
ரெனோ டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடலின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் ரூ.11.89 லட்சம் விலையிலும், ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட் ரூ.12.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. ரெனோ டஸ்ட்டரின் டாப் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








