கூடுதல் வசதிகளுடன் ரெனோ டஸ்ட்டரின் புதிய வேரியண்ட்!!

ஆர்எக்ஸ்இசட் ஆப்ஷன் பேக் டாப் டீசல் வேரியண்ட்டில்தான் தற்போது கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் என்ற பெயரில் வந்துள்ளது.
இதுதவிர, லெதர் இருக்கைகள், சாட்நவ் நேவிகேஷன் சிஸ்டமும், ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டிலிருந்து ஃபாக்ஸ் வுட் பினிஷிங்கும் புதிய வேரியண்ட்டின் கூடுதலாக இருக்கும்.
ஆனால், ரியர் ஏசி வென்ட் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புற பயணிகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாக எழுந்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டஸ்ட்டர் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இந்த புதிய வசதிகள் 110 பிஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் கிடைக்கும் என்று ரெனோ தெரிவித்துள்ளது.
ரூ.12.13 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டாப் வேரியண்ட் டஸ்ட்டர் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








