ஸ்பெஷல் எடிசன் ரெனோ ஸ்காலா அறிமுகம்- முழு விபரம்
கூடுதல் அம்சங்களுடன் கூடிய ஸ்காலா ஸ்பெஷல் எடிசன் காரை ரெனோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரூ.9,78,500 என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்காலா டிராவலோக் என்ற பெயரில் இந்த புதிய கார் ஆர்எக்ஸ்இசட் டீசல் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். ரூ.10,000 கூடுதலாக கொடுத்தால் சிறப்பு எடிசன் ஆக்சஸெரீஸ்களை பெற முடியும். ஸ்லைடரில் ஸ்பெஷல் எடிசன் ஸ்காலா காரின் அம்சங்களை காணலாம்.

விற்பனை யுக்தி
சராசரியாக மாதத்திற்கு 1,000 ஸ்காலா கார்களை ரெனோ விற்பனை செய்து வருகிறது. மார்க்கெட் மந்தமாக இருப்பதால் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகம் செய்துள்ளது. கூடுதல் ஆக்சஸெரீஸ் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டச் ஸ்கிரீன் நேவிகேஷன்
மல்டி மீடியா மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் ஒருங்கிணைந்த டச் ஸ்கிரீன் சிஸ்டம். வாய்ஸ் கமான்டு, டிவிடி பிளேயர், புளூடூத் இணைப்பு, யுஎஸ்பி போர்ட், ஐபாட் கனெக்ட்டிவிட்டி மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெறலாம்.

ஸ்கஃப் பிளேட்
கூடுதல் கவர்ச்சியை தரும் ஸ்காலா பெயர் பொறிக்கப்பட்ட ஸ்கஃப் பிளேட்.

சன் ஷேடு
சூரிய வெளிச்சத்தையும், வெப்பத்தையும் கட்டுப்படுத்தும் சன் ஷேடு திரை.

இன்டிகேட்டருடன் ரியர் வியூ மிரர்
ரியர் வியூ மிரரில் இன்டிகேட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

மஃப்லர் கட்டர்
சைலென்சர் குழாயில் மஃப்லர் கட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

கூடுதல் மதிப்பு
ரூ.9,68,500 விலையில் தற்போது ஸ்காலாவின் ஆர்எக்ஸ்இசட் டீசல் வேரியண்ட் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.10,000 கூடுதல் விலையில்(ரூ.9,78,500) முன்னர் சொன்ன கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் தற்போது ஸ்காலா கிடைக்கும்.

எஞ்சின்
ஸ்காலா டீசல் மாடலில் 84.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1461சிசி திறன் கொண்ட கே9கே டீசல் எஞ்சின் உயிர் கொடுக்கிறது.

மைலேஜ்
ஸ்காலாவின் டீசல் மாடல் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 18.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலை பயணத்தின்போது லிட்டருக்கு 21.64 கிமீ மைலேஜையும் தரும் என ரெனோ தெரிவிக்கிறது.

மே 31 வரை மட்டுமே...
அடுத்த மாதம் 31ந் தேதி வரை மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்காலா கார்கள் விற்பனைக்கு கிடைக்கும் என ரெனோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








