ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் 85 பிஎஸ் பவர் மாடலில் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு வந்தது
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவையொட்டி, அட்வென்ச்சர் என்ற பெயரில் டஸ்ட்டரின் சிறப்பு பதிப்பு மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 110 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடலில் அந்த சிறப்பு பதிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 85 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடலிலும் அதே அட்வென்ச்சர் எடிசன் மாடல் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 110 பிஎஸ் மாடலைவிட குறைவான விலையில் வந்துள்ளதால் அதிக வரவேற்பு பெறும் என்று ரெனோ நம்புகிறது. முழு விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ஹெட்லைட்
கரும் பூச்சு கொண்ட ஹெட்லைட், கூடுதல் பனி விளக்குகள் கொண்ட நட்ஜ் கார்டு ஆகியவை டஸ்ட்டரின் முகப்பை மிக கம்பீரமாக்கியுள்ளன. ரியர் வியூ கண்ணாடியின் பின்புறத்திலும், கதவு கைப்பிடிகளிலும் வெள்ளை நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
தற்போது வந்துள்ள 85 பிஎஸ் டஸ்ட்டரின் அட்வென்ச்சர் மாடலின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 85 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

டீகெல்
டி பில்லரில் அட்வென்ச்சர் டீகெல் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது அட்வென்ச்சர் டஸ்ட்டரை வித்தியாசப்படுத்துகிறது.

ஸ்பெஷல் வண்ணம்
அட்வென்ச்சர் எடிசன் டஸ்ட்டர் அமேசான் க்ரீன் என்ற வண்ணத்தில் கிடைக்கும்.

இன்டிரியர்
இருக்கைகள், மற்றும் கதவுகளில் எலுமிச்சை வண்ணக் கலவை ஆங்காங்கே அலங்கரிக்கிறது.

தரை விரிப்பு
தரை விரிப்பில் டஸ்டர் லோகோ மற்றும் எலுமிச்சை வண்ணத்திலான கோடுகளுடன் வசீகரிக்கிறது.

சென்டர் கன்சோல்
சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீலில் பியானோ பிளாக் வண்ணத்தில் அழகாக காட்சி தருகின்றன.

வசதிகள்
புளூடூத், யுஎஸ்பி போர்ட், 4 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், பிரேக் அசிஸ்ட், மீடியாநவ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ கண்ணாடிகள் போன்றவை இந்த ஸ்பெஷல் எடிசன் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டிலும் நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

ஆஃப் ரோடு ஆக்சஸெரீஸ்
பிளாஸ்டிக் வீல் ஆர்ச், பாடி கிளாடிங் போன்ற கூடுதல் ஆஃப் ரோடு ஆக்சஸெரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய அலாய் வீல்கள்
டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசனில் புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விலை
டஸ்ட்டர் அட்வென்ச்சர் 110 பிஎஸ் மாடல் ரூ.12.18 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்த நிலையில், இந்த புதிய அட்வென்ச்சர் சிறப்பு பதிப்பு ரெனோ டஸ்ட்டர் ரூ.9.16 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே, இது வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








