இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகிறது எல்பிஜியில் இயங்கும் டஸ்ட்டர்

Duster
இந்த ஆண்டு இறுதியில் எல்பிஜியில் இயங்கும் டஸ்ட்டர் மாடலை ரெனோ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தனது தாயகமான பிரான்சில் எல்பிஜியில் இயங்கும் டஸ்ட்டர் மாடலை ரெனோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்திய மதிப்பில் ரூ.9.60 லட்சம் விலையில் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சினை எல்பிஜியிலும் இயங்கும் வகையில் மாற்றியுள்ளது ரெனோ.

பிரான்சில் 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டருக்கான வாரண்டியுடன் எல்பிஜி மாடல் டஸ்ட்டர் கிடைக்கும். தற்போது புக்கிங்கும் துவங்கப்பட்டுள்ளது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் ஸ்பேர் வீல் இருக்கும் பகுதியில் எல்பிஜி சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது.

எனவே, எல்பிஜியில் இயங்கும் டஸ்ட்டர் மாடலில் ஸ்பேர் வீல் இருக்காது. அதேவேளை, பஞ்சர் கிட்டை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக வழங்கப்படும்.

எல்பிஜியில் இயங்கும்போது லிட்டருக்கு 10.89 கிமீ மைலேஜையும், பெட்ரோலில் இயங்கும்போது லிட்டருக்கு 13.88 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்பிஜியில் இயங்கும்போது எரிபொருள் செலவீனம் குறையும் என்பதோடு, கார்பன் புகை வெளியீடும் குறையும். பெட்ரோல் டேங்க் மற்றும் எல்பிஜி சிலிண்டரை முழுவதுமாக நிரப்பும்போது 1,000 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

இந்தியாவை பொறுத்தவரையில், விரைவில் வர இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியால் டஸ்ட்டருக்கு நெருக்கடி ஏற்படும் என ரெனோ கருதுகிறது. இதனை தவிர்க்கும் விதத்தில் எல்பிஜியில் இயங்கும் டஸ்ட்டரை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 9, 2013, 10:49 [IST]
English summary
French car maker Renault has launched LPG variant of Duster in France. The company is also planning to launch the LPG variant of Duster in India by end of this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+