ரூ.50,000 குறைவான விலையில் புதிய டீசல் ஸ்காலா: ரெனோ அறிமுகம்

Reno Scala
எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரெனோ ஸ்காலா டீசல் காரின் புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.8.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய ஆர்எக்ஸ்இ பேஸ் வேரியண்ட், ஆர்எக்ஸ்எல் என்ற மிட் வேரியண்ட்டைவிட ரூ.50,000 குறைவான விலையில் கிடைக்கும்.

ரெனோ ஸ்காலா காரில் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 82 எச்பி ஆற்றலையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

பல்ஸ், ஸ்காலாவுக்கு ரீகால்

பிரேக் சிலிண்டரில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக 2,836 பல்ஸ் கார்களையும், 4,180 ஸ்காலா கார்களையும் திரும்ப பெற இருப்பதாக ரெனோ அறிவித்துள்ளது.

நிசான் மைக்ரா, சன்னி கார்களுக்கு சமீபத்தில் இதே பிரச்னைக்காக திரும்ப பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த கார்களின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்களான பல்ஸ் மற்றும் ஸ்காலா கார்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2013, 10:18 [IST]
English summary
Without any fanfare Renault India has launched a new base variant of the Scala sedan. The new Scala RxE diesel variant is priced at INR 8.29 lakhs, which is Rs 50,000 cheaper than the now mid variant, Scala RxL.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+