கூடுதல் வேரியண்ட்டுகளில் ரெனோ ஸ்காலாவின் டிராவலோக் எடிசன் அறிமுகம்
கடந்த ஏப்ரல் மாதம் டிராவலோக் என்ற பெயரில் கூடுதல் வசதிகளுடன் கூடிய ரெனோ ஸ்காலாவின் லிமிடேட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்காலா செடான் காரின் டீசல் மாடலின் டாப் வேரியண்ட்டில் மட்டும் டிராவலோக் எடிசன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், கூடுதல் வேரியண்ட்டுகளில் ரெனோ ஸ்காலாவின் டிராவலோக் எடிசன் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிராவலோக் எடிசனில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை விபரம்
ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் (பெட்ரோல்): ரூ.8.48 லட்சம்
ஆர்எக்ஸ்எல் சிவிடி டிரான்ஸ்மிஷன் (பெட்ரோல்): ரூ.9.61 லட்சம்
ஆர்எக்ஸ்இசட் சிவிடி டிரான்ஸ்மிஷன் (பெட்ரோல்): ரூ.10.51 லட்சம்
ஆர்எக்ஸ்எல் (டீசல்): ரூ.9.31 லட்சம்
ஆர்எக்ஸ்இ (டீசல்): ரூ.10.20 லட்சம்
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்)

EMI ஆஃபர்
ஸ்காலா காருக்கு ரூ.7,999 என்ற மாதத் தவணைக் கொண்ட சிறப்பு திட்டத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர, 2 ஆண்டுகளுக்கான வாரண்டி மற்றும் 4 ஆண்டுகளுக்கான அவசர சாலை உதவித் திட்டத்தை இலவசமாகவும் வழங்குகிறது. ரெனோ ஸ்காலா டிராவலோக் எடிசனில் இருக்கும் கூடுதல் வசதிகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டச் ஸ்கிரீன் நேவிகேஷன்
மல்டி மீடியா மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் ஒருங்கிணைந்த டச் ஸ்கிரீன் சிஸ்டம். வாய்ஸ் கமான்டு, டிவிடி பிளேயர், புளூடூத் இணைப்பு, யுஎஸ்பி போர்ட், ஐபாட் கனெக்ட்டிவிட்டி மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெறலாம்.

ஸ்கஃப் பிளேட்
கூடுதல் கவர்ச்சியை தரும் ஸ்காலா பெயர் பொறிக்கப்பட்ட ஸ்கஃப் பிளேட்.

சன் ஷேடு
சூரிய வெளிச்சத்தையும், வெப்பத்தையும் கட்டுப்படுத்தும் சன் ஷேடு திரை.

ரியர் வியூ மிரர்
ரியர் வியூ மிரரில் இன்டிகேட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

மஃப்லர் கட்டர்
சைலென்சர் குழாயில் மஃப்லர் கட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

தோற்றத்தில் வித்தியாசம்
ஸ்காலா டிராவலோக் எடிசனை வித்தியாசப்படுத்தும் விதத்தில் வெளிப்புறத்தில் கோடுகள் போன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








