சும்மா பிய்ச்சுகிட்டு போன டஸ்ட்டர் விற்பனை!
கடந்த மாதம் டஸ்ட்டர் விற்பனை அதிகபட்ச அளவை பதிவு செய்துள்ளது. மொத்தம் 6,313 டஸ்ட்டர் எஸ்யூவி கார்களை ரெனோ கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது.
பல முன்னணி நிறுவனங்கள் கார் விற்பனையில் சரிவு என புலம்பி வருகின்றன. முடிந்தவரை சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை கவர பார்த்தன. ஆனால், இதற்கெல்லாம் விதி விலக்காகி நிற்கிறது டஸ்ட்டர்.

ஆம், கடந்த மாதம் 6,313 டஸ்ட்டர் கார்களை ரெனோ விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை டஸ்ட்டரின் விற்பனை தொட்டுள்ள அதிகபட்ச விற்பனை இதுவாகும். கடந்த ஜூலையிலிருந்து இதுவரை அந்த நிறுவனம் 30,000 டஸ்ட்டர் எஸ்யூவி கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
ரெனோவின் விற்பனையில் மொத்தம் 75 சதவீத பங்களிப்பை டஸ்ட்டர் கொடுத்து வருகிறது. கடந்த மாதம் 6,313 டஸ்ட்டர் எஸ்யூவி கார்களையும், 1,026 ஸ்காலா கார்களையும், 541 பல்ஸ் கார்களையும், 337 ஃபுளூயன்ஸ் கார்களையும், 15 கோலியோஸ் பிரிமியம் எஸ்யூவி கார்களையும் ரெனோ விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








