இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்- II கார்

By Saravana

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்- II மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சிறிய மாற்றங்களுடன் வந்திருக்கும் புதிய கோஸ்ட் மாடலின் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


வெளிப்புற மாற்றங்கள்

வெளிப்புற மாற்றங்கள்

எல்இடி ரன்னிங் விளக்குகள் புடைசூழ்ந்த ஹெட்லைட், சுற்றிலும் குரோம் பூச்சு கொண்ட ஏர் இன்டேக், புதிய பம்பர், கிரில் போன்றவை ரோல்ஸ்ராய்ஸ் பாரம்பரியத்தையும், நவீன யுகத்துக்கு தக்கவாறு அதில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதையும் காண்பிக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

புதிய நேவிகேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. நேவிகேஷன் சிஸ்டத்தின் வாயிலாக சாலை நிலைகளுக்கு தக்கவாறு கியர் மாற்றும் தொழில்நுட்பமும் கோஸ்ட் காரில் புதிது. இருக்கைகள் மிக சொகுசாகவும், வெப்பப்படுத்தும் வசதியும் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய கோஸ்ட் சீரிஸ்- II காரில் 563 பிஎஸ் பவரையும், 780என்எம் டார்க்கையும் வழங்கும் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது செயற்கைகோள் உதவியுடன் இயங்கும் 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது.

செயல்திறன்

செயல்திறன்

அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் கட்டமைப்பு கொண்டது. 0 - 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும்.

விலை

விலை

ரூ.4.50 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் - II கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
British luxury car maker Rolls Royce has launched the updated version of the Ghost, the Series II (two) in India.
Story first published: Friday, November 7, 2014, 13:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X