ஜூலையில் இந்தியா வருகிறது ரோல்ஸ்ராய்ஸ் ரயீத்

By Saravana
RR-Wraith
வரும் ஜூலை மாதம் புதிய ரயீத் செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ரோல்ஸ்ராய்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கோஸ்ட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்போர்ட்ஸ் கூபே செடான் காரின் டீஸர்களை சமீபத்தில் ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டது. இதுகுறித்து நாம் ஏற்கனவே எழுதியிருந்தோம். ரோல்ஸ்ராய்ஸ் வரலாற்றில் அதிக பவர்ஃபுல் மாடலாக ரயீத் வர இருக்கிறது.

இந்த புதிய கார் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தநிலையில், வரும் ஜூலையில் இந்திய மார்க்கெட்டில் இந்த புதிய காரை அறிமுகம் செய்ய ரோல்ஸ்ராய்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய காரில் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 600 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 0-100 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் கடக்கும் ஆற்றல் வாயந்ததாக இருக்கும்.

2 கதவுகளை கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கே உரிய ஆடம்பரத்தையும், வசதிகளையும் இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் விதத்தில் இந்த புதிய கார் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 23, 2013, 14:20 [IST]
English summary
British luxury car maker Rolls-Royce has named its forthcoming coupé version of the Ghost as Rolls-Royce Wraith. The model will be the most powerful in Rolls’s history, and is set to be revealed at the upcoming Geneva motor show. The company is also planing to launch wraith in India by July.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+