நவீன அம்சங்களுடன் புதிய காரை அறிமுகப்படுத்தும் ரோல்ஸ்ராய்ஸ்

Wraith
ரயீத் என்ற பெயரில் புதிய கூபே ரக ஆடம்பர காரை ஜெனிவா மோட்டார் ஷோவில் ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.

ஆடம்பர கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ரோல்ஸ்ராய்ஸ் தற்போது கோஸ்ட், ஃபாண்டம் கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், கோஸ்ட் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய கூபே ரக காரை ரோல்ஸ்ராய்ஸ் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

ரயீத் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய காரின் டீஸர் படத்தை ரோல்ஸ்ராய்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

ரயீத் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு கார் மாடலை ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்து வந்தது. 1938ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட அந்த காரில் 4.2 லிட்டர் எஞ்சினுடன் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில், இந்த புதிய ராத் கார் புதிய தலைமுறை அம்சங்களுடன் கூடிய டிசைன் மற்றும் வசதிகளுடன் வருகிறது. 2 கதவுகளை கொண்டிருக்கும்.

டீஸர் படத்தில் எதிர்பார்ப்பை கூட்டும் இந்த புதிய ஆடம்பர கார் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் தரிசனம் தர காத்திருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 25, 2013, 11:19 [IST]
English summary

 Rolls-Royce, the British luxury carmaker has released a teaser image of its upcoming car. Tentatively named as the Wraith, the new coupe appears to be a coupe based on the Ghost platform. The Wraith is expected to evolve in to the Ghost two door coupe.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+