ரூ.4.4 கோடியில் விற்பனைக்கு வந்த ரோல்ஸ்ராய்ஸ் ரயீத்!

By Saravana

இந்தியாவில் ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் கார் இன்று முதல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிற ரோல்ஸ்ராய்ஸ் கார்களைவிட பல கூடுதல் அம்சங்களை கொண்டதாக ரயீத் வந்திருப்பதால் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரக்கூடும்.

2,360 கிலோ எடையுடன் ரோல்ஸ்ராய்ஸ் எடை குறைந்த காராக வர்ணிக்கப்படும் இந்த கார் பெர்ஃபார்மென்ஸிலும் சிறப்பானதாக இருக்கும். கூடுதல் விபரங்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 6.6 லிட்டர் ட்வின் டர்போசார்ஜர் கொண்ட வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 624 பிஎச்பி ஆற்றலையும், 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இந்த காரில் 8 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது எஞ்சினிலிருந்து ஆற்றலை பின்புற சக்கரங்களுக்கு கடத்தும்.

ஏர் சஸ்பென்ஷன்

ஏர் சஸ்பென்ஷன்

மாயஜால பயண அனுபவத்தை வழங்கும் வகையில், இதில் ஏர் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் சஸ்பென்ஷன் செட்டிங்கை வேகத்துக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.

சேட்டிலைட் டிரான்ஸ்மிஷன்

சேட்டிலைட் டிரான்ஸ்மிஷன்

இந்த காரின் மிக முக்கிய தொழில்நுட்பமாக செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் டிரான்ஸ்மிஷனை கூறலாம். சாலை நிலை, டிரைவிங் ஸ்டைலை பொறுத்து சரியான கியருக்கு தானாகவே மாறிக் கொள்ளும் சிறப்பு கொண்டது.

 கூரை விளக்குகள்

கூரை விளக்குகள்

இந்த காரின் உட்புற கூரையில் கையால் நெய்யப்பட்ட ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியில் 1,340 சின்னஞ்சிறிய விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது இரவு வானில் நட்சத்திர கூட்டங்களை போன்று புதிய பயண அனுபவத்தை தரும்.

விலை

விலை

ஏராளமான நவீன தொழில்நுட்பங்கள், வசதிகளுடன் வந்திருக்கும் இந்த கூபே ரக ரோல்ஸ்ராய்ஸ் கார் டெல்லியில் ரூ.4.4 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 19, 2013, 14:31 [IST]
English summary
The Wraith is the newest member from the Rolls Royce royalty to be launched in India. The Wraith, the sporties of the lot, is still a heavy beast. But a massive turbo charged engine and stiff suspension give it an impressive performance for a car that tips the scale at 2360 kg.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+