கூடுதல் மைலேஜ் தரும் ஸ்விப்ட் கான்செப்ட் மாடல்!

ஜெர்மனியை சேர்ந்த சாஃப்லர் நிறுவனம் புதிய ஆட்டோமொபைல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிலையில், புனேயில் நடந்த ஆட்டோமொபைல் தொழில்நுட்ப கண்காட்சியில் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் ஸ்விப்ட் கார் கான்செப்ட்டை சாஃப்லர் பார்வைக்கு வைத்திருந்தது.
எதிர்கால இந்தியாவின் எரிபொருள் சிக்கன வாகனம் என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த இந்த ஸ்விப்ட் கான்செப்ட் கார் சாதாரண ஸ்விப்ட்டை விட 10 சதவீதம் கூடுதல் மைலேஜ் தரும். இதற்காக, இந்த ஸ்விப்ட் காரில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது சாஃப்லர்.
எலக்ட்ரிக் கிளட்ச் மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்த புதிய கான்செப்ட் மாடல் ஸ்விப்ட்டை அந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








