ஸ்கோடா ரேபிட் வாங்குவோர் முதல் ஓர் ஆண்டு EMI கட்ட வேண்டாம்- ஸ்கோடா ஆஃபர்
ரேபிட் காருக்கு அதிரடி சிறப்பு கடன் திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ அறிவித்துள்ளது. ரேபிட்டை கடன் திட்டத்தில் வாங்குவோர் முதலாம் ஆண்டு மாதத் தவணை கட்டத் தேவையில்லை என ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது.
கார் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல புதுமையான கடன் திட்டங்களை ஸ்கோடா ஆட்டோ அறிவித்து வருகிறது. ரேபிட் காருக்கு ரூ.8,999 மாதத் தவணை திட்டத்தை அறிமுகம் செய்தது. மேலும், குஜராத்தை சேர்ந்த ஸ்கோடா டீலர் ரேபிட் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மூன்று ஆண்டுகளில் ஃபேபியா காரை இலவசமாக பெறும் திட்டத்தையும் அறிவித்தது.

இந்த திட்டங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இந்த நிலையில், தற்போது ரேபிட் காருக்கு புதிய கடன் திட்டத்தை ஸ்கோடா அறிவித்துள்ளது. இதன்படி, முன்பணம் கட்டி ரேபிட் காரை எடுத்துச் செல்லலாம். இந்த கடன் திட்டத்தின்படி முதல் ஓர் ஆண்டுக்கு மாதத் தவணை கட்டத் தேவையில்லை.
இரண்டாவது ஆண்டு முதல் மாதத் தவணை கட்டினால் போதுமானது. முன்பணத்தை செலுத்தியவுடன் வாடிக்கையாளர்கள் மாதத் தவணை பற்றி கவலைப்பட தேவையிருக்காது. ஸ்கோடா ஆட்டோ பைனான்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மூலம் இந்த கடன் திட்டம் வழங்கப்படுகிறது. ஆனால், இது குறுகிய கால சலுகை கடன் திட்டம் என ஸ்கோடா அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








