ஸ்கோடா கார்களுக்கு கோடைகால சிறப்பு சர்வீஸ் முகாம்!
கார்களுக்கான கோடைகால சிறப்பு சர்வீஸ் முகாமை ஸ்கோடா அறிவித்துள்ளது. நேற்று துவங்கிய இந்த சிறப்பு சர்வீஸ் முகாம் அடுத்த மாதம் 8ந் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வீஸ் முகாமில் 20 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என ஸ்கோடா தெரிவித்துள்ளது. ஏசி, ஆயில் செக்கப், எஞ்சின் செக்கப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் விதமாக இந்த பரிசோதனை முகாம் இருக்கும் என்றும், இந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்றும் ஸ்கோடா ஆட்டோ கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள டீலரை அணுகுமாறு வாடிக்கையாளர்களை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








