ஸ்கோடா ரேபிட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது- விபரம்
ஸ்கோடா ரேபிட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
நேற்று அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் போன்றே ஸ்கோடா ரேபிட் காரின் டீசல் மாடல் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டதாக வந்திருக்கிறது. ஆனால், ரேபிட் காரில் பிளாக் எடிசன் என்ற மாடலும் விற்பனைக்கு கிடைக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்
ரேபிட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய 1.5 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். இதுதவிர, புதிய 1.6 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சினும் 105 பிஎஸ் பவரையும், 153என்எம் டார்க்கையும் அளிக்கும். மேலும், புதிய 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வாடிக்கையாளர்களை கவரும் அம்சமாக இருக்கிறது.

முக்கிய அம்சங்கள்
க்ரூஸ் கன்ட்ரோல், இஎஸ்பி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இன்டிரியரில் அதிக மாற்றங்கள் இல்லை. மேலும், ரேபிட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பிளாக் எடிசன் என்ற மாடலும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

பிளாக் எடிசன்
இதில், அலாய் வீல்கள், ஹெட்லைட், ரியர் வியூ கண்ணாடிகள் போன்றவை கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பாடி டீகெல்ஸ் உண்டு. இதற்கு ரூ.20,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலை விபரம் - பெட்ரோல்
பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ்
1.6லி எம்பிஐ ஆம்பியன்ட்: ரூ.7.22,230
1.6லி எம்பிஐ ஆம்பிஷன் ப்ளஸ்: ரூ.8,17,181
1.6லி எம்பிஐ எலிகன்ஸ் பெட்ரோல் மேனுவல்: ரூ.8,72,017
1.6 எம்பிஐ எலிகன்ஸ் பெட்ரோல் பிளாக் பேக்கேஜ்: ரூ.8,85,117
பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்
1.6 எம்பிஐ ஆம்பிஷன் ப்ளஸ்: ரூ.9,14,940
1.6 எம்பிஐ எலிகன்ஸ்: ரூ.9,68,583
1.6 எம்பிஐ எலிகன்ஸ் பிளாக் பேக்கேஜ்: ரூ.9,81,683

டீசல் மாடல் விலை விபரம்
டீசல் மேனுவல் கியர்பாக்ஸ்
1.5லி ஆக்டிவ்- ரூ.8,38,772
1.5லி ஆம்பிஷன் ப்ளஸ்: ரூ.9,24,813
1.5லி எலிகன்ஸ்: ரூ.9,74,324
1.5லி எலிகன்ஸ் பிளாக் எடிசன்: ரூ.9,87,424
ஆட்டோமேட்டிக்
1.5லி ஆம்பிஷன் ப்ளஸ்: ரூ.10,34,813
1.5 எலிகன்ஸ்: ரூ.10,84,324
1.5 எலிகன்ஸ் பிளாக் எடிசன்: ரூ.10,97,424


Click it and Unblock the Notifications








