கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் எடிசன் ஸ்கோடா ரேபிட் அறிமுகம்
ரூ.8.99 லட்சத்தில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் எடிசன் ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு வந்துள்ளது. கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
அதில், தற்போது கார் நிறுவனங்களை பற்றிக் கொண்டிருக்கும் ஜுரம் ஸ்பெஷல் எடிசன். மாருதி முதல் அனைத்து நிறுவனங்களும் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில்தான் தற்போது ஸ்கோடா ரேபிட் செடானும் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் வந்துள்ளது.

பிரஸ்டீஜ் எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் ஸ்கோடோ ரேபிட் டீசல் மாடலில் மட்டும் கிடைக்கும். பார்க்கிங் சென்சார், நேவிகேஷன் சிஸ்டம், வின்ட் சென்சார், புளோர் மேட் மற்றும் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ்கள் கொண்டதாக வந்துள்ளது ஸ்பெஷல் எடிசன். இந்த கார் குறுகிய கால விற்பனைக்காக விடப்பட்டுள்ளது.
டீசல் ரேபிட் காரில் 105 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சிறப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.8.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஸ்கோடா ரேபிட் ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








