இந்தியாவில் ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு வந்தது!
ரூ.18.87 லட்சம் ஆரம்ப விலையில் ஸ்கோடா சூப்பர்ப் காரின் மேம்படுத்தப்பட் மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வடிவமைப்பில் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா சூப்பர்ப் கார் வந்துள்ளது. அதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புற மாற்றங்கள்
பகல்நேர ரன்னிங் விளக்குகள் கொண்ட புதிய ஹெட்லைட்டுகள், புதிய ஆக்டாவியா காரில் இருப்பது போன்ற பம்பர், புதிய கிரில், எல்இடி டெயில் லைட்டுகள், ஆடி கார்கள் போன்று தோற்றமளிக்கும் பின்புற டெயில் கேட் வடிவைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்ட சூப்பர்ப் காரின் அழகை கூட்டுகின்றன.

இன்டிரியர்
இன்டிரியரில் அதிக மாற்றங்கள் இல்லை. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகள் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வந்துள்ளது.

புதிய அலாய் வீல்கள்
காரின் தோற்றத்தை புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்களும் மிக வசீகரமாக காட்டுகின்றன.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 158 பிஎச்பி பவரை அளிக்கும் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 138 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிப்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்
மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.1 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜையும் தரும் என ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது.

அம்சங்கள்
கீ லெஸ் என்ட்ரி, பை ஸினான் ஹெட்லைட்டுகள், குடை, 8 ஏர்பேக்குகள், 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய போலிரோ சர்ரவுண்ட் மியூசிக் சிஸ்டம், டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 565 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் அதிக பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக அமையும்.

வண்ணங்கள்
பிரில்லியண்ட் சில்வர், மேக்னடிக் பிரவுன் மற்றும் மெட்டல் கிரே ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை விபரம்
பெட்ரோல் மாடல்
ஆம்பிஷன்: ரூ.18,87 லட்சம்
எலிகன்ஸ் மேனுவல்: ரூ.20.65 லட்சம்
எலிகன்ஸ் ஆட்டோமேட்டிக்: ரூ.22.27 லட்சம்
ஆம்பிஷன் ஆட்டோமேட்டிக்: ரூ.23.43 லட்சம்
டீசல்
எலிகன்ஸ் ஆட்டோமேட்டிக்: ரூ.25.20 லட்சம்
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)


Click it and Unblock the Notifications








