ரூ.18.99 லட்சத்தில் ஸ்கோடா யெட்டி ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது
ரூ.18.99 லட்சம் விலையில் ஸ்கோடா யெட்டி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த மாடல் கடந்த ஆண்டுதான் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டிசைன்
பிற எஸ்யூவி மாடல்களிலிருந்து மிகவும் தனித்துவமான டிசைன் கொண்ட யெட்டி டிசைன் தற்போது கூடுதல் கம்பீரமாகியுள்ளது. முகப்பு கிரில், பனி விளக்குகள் சற்று கீழே மாற்றப்பட்டுள்ளன. ஸ்கோடாவின் புதிய டிரேட் மார்க் கிரில்லும் யெட்டிக்கு அழகை கொடுக்கிறது. புதிய அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், பம்பர்களுக்கு கீழே சில்வர் ஃபினிஷிங் போன்றவை தோற்றத்திற்கு சிறப்பு சேர்க்கும் புதிய மாற்றங்கள்.

இன்டிரியர்
இன்டிரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுனர் இருக்கை, க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆனால், யுஎஸ்பி போர்ட் மற்றும் சன்ரூஃப் இல்லை என்பது ஆச்சரியமூட்டுகிறது.

எஞ்சின்
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் நம்பகமான 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டுவிதமான ட்யூனிங்கில் கிடைக்கும். அதாவது, 2 வீல் டிரைவ் மாடல் 110 பிஎஸ் பவரை அளிக்கும் விதத்திலும், 4 வீல் டிரைவ் மாடல் 140 பிஎஸ் பவரை அளிக்கும் விதத்திலும் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

வேரியண்ட்
இரண்டு மாடல்களுமே எலிகன்ஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

விலை
2 வீல் டிரைவ் மாடல் ரூ.18.99 லட்சத்திலும், 4 வீல் டிரைவ் மாடல் ரூ.20.53 லட்சத்திலும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








