இந்தியாவில் 3 சீட்டர் வேகன்-ஆரை அறிமுகப்படுத்துமா மாருதி?
இந்தியாவில் பிரிமியம் வேகன்-ஆர் வெர்ஷனை மாருதி சுஸுகி அறிமுகப்படுத்துமா என்ற ஆவல் எழுந்துள்ளது. இதற்கு காரணமே இந்த கார் சமீபத்தில் சீனாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. சீனா மற்றும் இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டுகள் ஒன்றுபோல் இருப்பதால் இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன.
பார்ப்பதற்கு மினி எம்பிவியாக இருக்கும் இந்த கார் தற்போது ஜப்பானில் 2 வரிசைகள் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இந்த கார் 3 வரிசைகள் கொண்ட காராக அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆட்டோமொபைல் துறை யூக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோலியோ என்ற பெயரில் ஜப்பானில் சுஸுகி விற்பனை செய்து வரும் இந்த பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
வேகன்-ஆர் போன்றே இந்த காரும் டால் பாய் டிசைன் கான்செப்ட்டில் வடிவவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை பிரிமியம் வேகன்-ஆர் கார் என்று குறிப்பிடுகின்றனர். வேகன்-ஆர் ஒத்த சாயல் இருந்தாலும் தோற்றத்தில் சிறப்பாகவே இருக்கிறது.

எம்பிவி கார்
ஜப்பானில் பிரிமியம் ஹேட்ச்பேக் காராக விற்பனை செய்யப்பட்டு வரும் சோலியோவை இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான மினி எம்பிவி காராக களமிறக்கப்படலாம் என தெரிகிறது.

எஞ்சின்
இந்த காரில் 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1242 சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

டிரான்ஸ்மிஷன்
இந்த கார் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

இருக்கை வசதி
ஜப்பானிய விதிகளின்படி தற்போது 5 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டதாக இந்த கார் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த கார் 7 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்டதாக இருக்கும்.

யுட்டிலிட்டி கார்கள் பக்கம் கவனம்
மாருதியின் கவனம் யுட்டிலிட்டி கார்களை அறிமுகப்படுத்துவதில் திரும்பியிருப்பதால் இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என ஆட்டோமொபைல் துறை ஆணித்தரமான யூகத்தை முன் வைக்கிறது.

விலை
இந்த கார் எர்டிகாவைவிட சிறிது குறைவான விலையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்
இந்த கார் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

எப்போது அறிமுகமாகும்?
கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு இந்தியாவில் இறுதியில் இந்த கார் இந்தியா வர வாய்ப்பிருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் எம்பிவி கார்
3 வரிசைகள் கொண்டதாக 4 மீட்டருக்குள் அறிமுகம் செய்யப்பட்டால் இந்தியாவின் முதல் மினி எம்பிவி கார் என்ற பெருமையை இது பெற்றுவிடும்.


Click it and Unblock the Notifications








