கார்களின் விலையை அதிரடியாக குறைத்த டாடா மோட்டார்ஸ்
இருப்பை காலி செய்வதற்காக கார்களின் விலையை ரூ.50,000 வரை குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ். கடும் மார்க்கெட் போட்டியால் டாடா கார்களின் விற்பனை குறைந்விட்டது. இதனால், டீலர்களில் கார்களின் இருப்பு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 25,000 முதல் 30,000 கார்கள் வரை டீலர்களில் இருப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, இண்டிகா, மான்ஸா கார்களின் விலையை டாடா அதிரடியாக குறைத்துள்ளது. வரும் நிதி ஆண்டுக்குள் இருப்பில் உள்ள கார்களை விற்று தீர்க்கும் விதத்தில் இந்த அதிரடி அறிவிப்பை டாடா வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே, சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த அதிரடி விலை குறைப்பையும் டாடா அறிவித்துள்ளது.

இண்டிகா
இண்டிகா வரிசை கார்களின் விலை ரூ.29,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

மான்ஸா
மான்ஸா செடான் காரின் விலையை ரூ.50,000 வரை குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்

நானோ
இண்டிகா, மான்ஸா விலை குறைக்கப்பட்டபோதிலும், நானோ காரின் விலை குறைக்கப்படவில்லை.

சுமோ கோல்டு
மத்திய பட்ஜெட்டில் எஸ்யூவி கார்களுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பதால் சுமோ விலையை ரூ.7,500 வரை அதிகரிக்கிறது.

டாடா சஃபாரி
சஃபாரி எஸ்யூவியின் விலை ரூ.11,000 அதிகரிக்கப்படுகிறது.

ஆரியா
ஆரியா விலை ரூ.11,000 வரை அதிகரிக்கப்படுகிறது. வேரி்யண்ட்டுக்கு தக்கவாறு எஸ்யூவி கார்களின் விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை உயரும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








