டாடா இன்டிகா இவி2 டீசல் கார் விலை ரூ.46,000 குறைப்பு!
இன்டிகா இவி2 காரின் பேஸ் வேரியண்ட்டின் விலையை ரூ.46,000 அதிரடியாக குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
ஒட்டுமொத்த கார் மார்க்கெட்டும் மந்த நிலையில் இருந்து வருகிறது. அதிலும், டாடா மோட்டார்ஸ் விற்பனை இதுவரை இல்லாத அளவு குறைந்துவிட்டது.

விற்பனையை அதிகரிக்க பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், இன்டிகா இவி2 டீசல் காரின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்
ரூ.4.63 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இன்டிகா இவி2 காரின் எல்எஸ் பேஸ் வேரியண்ட் விலை தற்போது ரூ.4.17 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்டிகா இவி2 காரில் 70 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் காமன் ரயில் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








