சிஎன்ஜியில் இயங்கும் டாடா கார்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்
சிஎன்ஜியில் இயங்கும் டாடா இண்டிகா மற்றும் இண்டிகோ கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இண்டிகா இமேக்ஸ் மற்றும் இண்டிகோ இமேக்ஸ் என்ற பெயர்களில் இந்த கார்கள் கிடைக்கும்.
அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட இந்த கார் மாடல்கள் டெல்லி, மஹாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் சிஎன்ஜி நிலையங்கள் உள்ள நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என டாடா தெரிவித்துள்ளது. மைலேஜ், விலை உள்ளிட்ட விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
இந்த புதிய இண்டிகா மற்றும் இண்டிகோ சிஎன்ஜி மாடல் கார்களில் 65 எச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

இண்டிகோ மைலேஜ்
இண்டிகோ இமேக்ஸ் கார் லிட்டருக்கு 24.6 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜியில் 230 கிமீ தூரமும், பெட்ரோலில் 650 கிமீ தூரமும் செல்ல முடியும் என்கிறது டாடா.

இண்டிகோ இமேக்ஸ் விலை
இண்டிகோ இமேக்ஸ் ஜிஎல்எஸ் வேரியண்ட் ரூ.4.99 லட்சம் விலையிலும், ஜிஎல்எக்ஸ் வேரியண்ட் ரூ.5.27 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

இண்டிகா இமேக்ஸ் மைலேஜ்
இண்டிகா இமேக்ஸ் கார் லிட்டருக்கு 23.7 கிமீ மைலேஜ் தரும் என டாடா தெரிவிக்கிறது. சிஎன்ஜி சிலிண்டர் முழுமையாக நிரப்பினால் 230 கிமீ தூரமும், பெட்ரோல் மூலம் 600 கிமீ தூரமும் செல்ல முடியும் என்கிறது டாடா.

விலை
இண்டிகா இமேக்ஸ் ஜிஎல்எஸ் வேரியண்ட் ரூ.3.99 லட்சம் விலையிலும், ஜிஎல்எக்ஸ் வேரியண்ட் ரூ.4.26 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








