ஹோண்டா அமேஸை விட டாடா மான்ஸாதான் சிறந்த காரா? - டாடாவின் ஒப்பீடு
ஹோண்டா அமேஸ் காரை விட மான்ஸா கார்தான் அனைத்து விதத்திலும் சிறந்தது என ஒப்பீடு ஒன்றை தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். விலை, இடவசதி, வசதிகள் மற்றும் அம்சங்கள் என அனைத்திலும் மான்ஸா சிறந்த கார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று ஒப்பீட்டு விளம்பர பிரச்சாரம் செய்வது டாடாவுக்கு புதிதல்ல. இதற்கு முன் ஸ்விப்ட் காரைவிட விஸ்டா கார் சிறந்தது என ஒரு ஒப்பீட்டு விளம்பர பிரச்சாரத்தை டாடா செய்தது. சமீபத்தில் மாருதி வேகன் ஆர் காருடன் இண்டிகா இவி2 டீசல் காரை ஒப்பிட்டு விளம்பர பிரச்சாரம் மேற்கொண்டது.இந்த நிலையில், சமீபத்தில் விற்பனைக்கு வந்து வரவேற்பை பெற்றிருக்கும் ஹோண்டா அமேஸ் காருடன், மான்ஸாவை ஒப்பிட்டுள்ளது டாடா. கீழே உள்ள படத்தில் டாடா வெளியிட்டிருக்கும் ஒப்பீட்டு தகவல்கள்.



Click it and Unblock the Notifications








