ரூ.10 லட்சத்திற்குள் புதிய ஆரியாவை களமிறக்கும் டாடா!

யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் அனைத்து கார் மாடல்களும் நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில், டாடா ஆரியாவின் விற்பனை படு மந்தமாக இருந்து வருகிறது.
இதையடுத்து, இந்த முடிவை டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ளது. மேலும், டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா எக்ஸ்யூவி500 மார்க்கெட்டிலிருந்து சிறிது பங்களிப்பை பெறுவதற்காக தற்போது இந்த குறைந்த விலை ஆரியா வருகிறது.
அறிமுகம் செய்யப்பட்டபோது கணக்கிலடங்கா வசதிகளுடன் வந்த ஆரியாவில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வசதிகளை குறைத்து விலையையும் குறைத்து வருகிறது டாடா மோட்டார்ஸ்.
டாடாவின் இந்த முயற்சிக்கு பலன் கிட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








