ரூ.9.95 லட்சத்தில் தமிழகத்தில் டாடா சஃபாரி ஸ்ட்ராம் அறிமுகம்!

சென்னையில் நடந்த இதற்கான விழாவில் கலந்து கொண்ட டாடா யுட்டிலிட்டி வர்த்தகப் பிரிவு அதிகாரி ஆசிஷ் தர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
" உறுதியான கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட வேரிகோர் எஞ்சினுடன் சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இதுவரை 6,000 முன்பதிவுகளை சஃபாரி ஸ்ட்ராம் பெற்றுள்ளது.
மேலும், தமிழகம் எங்களுக்கு மிக முக்கியமான மார்க்கெட். எங்களது மொத்த யுட்டிலிட்டி வாகன விற்பனையில் தமிழகம் 17 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. எனவே, சஃபாரி ஸ்ட்ராமுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்," என்றார்.
புதிய சஃபாரி ஸ்ட்ராம் அறிமுகம் செய்யப்பட்டபோதிலும், பழைய சஃபாரி மாடலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. ரூ.9.95 லட்சம் விலையில் புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியும், ரூ.8.44 லட்சம் ஆரம்ப விலையில் சஃபாரி எஸ்யூவியும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








