நானோ உற்பத்தி இழப்பை ஈடுகட்ட புதிய ஹேட்ச்பேக் கார்: டாடா முடிவு!

குஜராத், சனந்த் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நானோ கார் தொழிற்சாலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால், அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை நானோ கார் எதிர்பார்த்த உற்பத்தி அளவை ஒருமுறை கூட எட்டவில்லை.
அந்த தொழிற்சாலையின் மொத்த உற்பத்தி திறனில் தற்போது 20 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும், கடந்த மாதம் மொத்தமே 948 நானோ கார்கள் மட்டுமே விற்பனையானதால், நானோ கார் மீது இதுவரை இருந்த அனைத்து நம்பிக்கையும் டாடாவுக்கு போய்விட்டது.
மேலும், அங்கு நானோ உற்பத்திக்காக செய்யப்பட்ட பெரும் முதலீடும் கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து, சனந்த் தொழிற்சாலையில் ஏற்பட்டு வரும் உற்பத்தி இழப்பை சரிகட்டும் விதத்தில் புதிய ஹேட்ச்பேக் காரை அங்கு உற்பத்தி செய்வதற்கு டாடா முடிவு செய்துள்ளது.
இண்டிகா பிளாட்பார்மில் புதிய ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கார் மூலம் அங்கு செய்யப்பட்ட முதலீட்டை ஓரளவு திரும்ப பெற முடியும் என டாடா நம்புகிறது.


Click it and Unblock the Notifications








