மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் டாடா மூவஸ் எம்யூவி விற்பனைக்கு வந்தது!
சுமோ கிராண்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த எம்யூவியை மேம்படுத்தி மூவஸ் என்ற பெயரில் புதிய மாடலாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
புதிய மூவஸ் எம்யூவி மூன்றுவிதமான இருக்கை அமைப்பு கொண்ட மாடல்களில் கிடைக்கும். கேப்டன் இருக்கைகளுடன் 7 சீட்டர் மாடலிலும், பெஞ்ச் இருக்கைகள் கொண்டதாக 8 சீட்டர் மாடலிலும், கடைசி வரிசையில் எதிரெதில் இருக்கை அமைப்பு கொண்டதாக 9 சீட்டர் மாடலிலும் கிடைக்கும்.

இந்த புதிய மூவஸ் எம்யூவியில் 120 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் ஆற்றல் 4 சக்கரங்களுக்கும் கடத்தப்படுகிறது.
புதிய மூவஸ் எம்யூவி லிட்டருக்கு 15.16 கிமீ மைலேஜ் தரும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. டில்ட் வசதியுடன் கூடிய பவர் ஸ்டீயரிங், 5.35 மீட்டர் டர்னிங் ரேடியஸ் முக்கிய சிறப்பம்சங்கள். போர்சலைன் ஒயிட் மற்றும் மீட்டியோர் சில்வர் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும்.
ரூ.6.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் வர்த்தக மார்க்கெட் என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏதுவான விலையில் இந்த புதிய மூவஸ் எம்யூவியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








