ஸ்விப்ட், ஃபிகோவுக்கு போட்டியாக டாடாவின் புத்தம் புதிய கார்!

இண்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட பிளாட்பார்மில் 'எக்ஸ்0' என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய கார் டிசைன் செய்யப்படுகிறது.
டாடாவின் மிக முக்கியமான மாடலாக கருதப்படும் இந்த புதிய கார் வரும் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும்.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது இளம் வாடிக்கையாளர்கள கவரும் விதத்தில் செவர்லே ஸ்பார்க் மற்றும் பீட் கார்களை அறிமுகம் செய்ததில் முக்கிய பங்கு வகித்த டாடாவின் தற்போதைய தலைவர் கார்ல் ஸ்லிமின் முக்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டு வருகிறது.
இதன் பாடி பேனல்கள் மிகச் சிறந்த கட்டுமானம் கொண்டதாக இருக்கும். மார்ச் 31ந் தேதிக்குள் இந்த காருக்கான எஞ்சின் மற்றும் இதர வசதிகள் குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. மேலும், புதிய காருக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு குறித்து சப்ளையர்களுக்கும் முக்கிய தகவல்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய காரில் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, இந்த காரின் அதிக பவர் கொண்ட வேரியண்ட்களை அறிமுகப்படுத்தவும் டாடா திட்டமிட்டுள்ளது.
ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் திணறி வரும் டாடா நிறுவனம் இந்த புதிய கார் மூலம் தனிநபர் கார் மார்க்கெட்டில் முக்கிய இடம்பெறும் என்று அந்த நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








