டெஸ்ட் டிரைவில் டீம் டிரைவ்ஸ்பார்க்... அது என்ன கார் என கண்டுபிடிக்க முடிகிறதா?
மாதக் கடைசியும், வாரக் கடைசியும் இணைந்துள்ள இவ்வேளையில் கையில் ஒரு பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார் டெஸ்ட் டிரைவுக்கு சிக்கியுள்ளது. அதற்கு எந்தளவு திராணி(பவர்ஃபுல்)இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அதனை கதற கதற தற்போது பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி சாலைகளில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்து வருகிறோம். இன்னும் ஒரு சில நாட்களில் அந்த காரின் திராணி என்ன, போட்டியாளர்களுக்கும் அதற்கும் இருக்கும் வித்தியாசங்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் குறித்து விலாவரியாக எழுத உள்ளோம்.
முக்கியமாக என்னென்ன குறைகள் உள்ளன என்பதை அலசி ஆராய்ந்து ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பாக வழங்க இருக்கிறோம். அதற்கு முன்பாக, அது என்ன காராக இருக்கும் என்பதை உங்களால் யூகிக்கி முடிகிறதா. முடிந்தால், கருத்து பெட்டியில் எழுதுங்கள். அது சரியா, தவறா, ஒரிரு நாட்களில் தெரிந்துவிடும். க்ளூ என்பவர்களுக்கு வர்த்தக வாகன மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கும் வாகன தயாரிப்பாளரின் ஹேட்ச்பேக் வரிசையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பவர்ஃபுல் வெர்ஷன்தான் அது. அட படத்தில் இருக்கும் அந்த டெஸ்ட் டிரைவ் காரை கண்டுபிடித்துவிட்டீர்களா? அப்படியே, கருத்து பெட்டி பக்கம் வந்துவிடுங்களேன்.



Click it and Unblock the Notifications








